UPDATED : ஏப் 17, 2026 03:47 AM
ADDED : ஏப் 17, 2026 01:25 AM

இஸ்லாமாபாத்: இந்தியாவில், பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ள லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா, 67, பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
கடந்த 1985ம் ஆண்டு, பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் இணைந்து லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை நிறுவியவர் அமீர் ஹம்சா. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் அவருக்கு தொடர்பு உள்ளது.
இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில் உள்ள செய்தி நிறுவனத்தின் அருகே இருந்த ஹம்சா மீது, நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு மே மாதம் லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, இதேபோன்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பின் அவருக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்ததாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும், தற்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
