புதிய தேசத்தை உருவாக்குவோம் : வீடியோ வெளியிட்டு பேகம் கலிதா ஜியா உரை
புதிய தேசத்தை உருவாக்குவோம் : வீடியோ வெளியிட்டு பேகம் கலிதா ஜியா உரை
ADDED : ஆக 07, 2024 07:10 PM

டாக்கா: வளமான புதிய வங்கதேசத்தை உருவாக்குவோம் என முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளயடுத்து வங்கதேச பார்லிமென்டை கலைக்கப் பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் நாளை( ஆக.,8) இடைக்கால அரசு அமைக்க உள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்ய அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவிட்டதையடுத்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு கலிதா ஜியா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அதில் கூறியுள்ளதாவது,
வீரமும், துணிச்சலும் மிக்க நம் இளைஞர்களால் நாடு விடுதலை அடைந்துள்ளது. எனது உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் நாடு புதிய தொடக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலால் சிதைந்து போன ஜனநாயகத்தை மீட்டு ஒரு புதிய வளமான வங்காளதேசத்தை உருவாக்குவோம்.
முடியாததை முடித்துக்காட்டிய துணிச்சல் மிக்க இளைஞர்களுக்கும், இதற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கும் தலை வணங்குகிறேன்.இவ்வாறு அந்த வீடியோவில் கலிதா ஜியா தெரிவித்துள்ளார்.