லிதுவேனியா கடந்தாண்டு அரசியலுக்கு வந்தவர் புதிய பிரதமராக தேர்வானார்
லிதுவேனியா கடந்தாண்டு அரசியலுக்கு வந்தவர் புதிய பிரதமராக தேர்வானார்
ADDED : ஆக 27, 2025 11:08 PM

வில்னியஸ்: லிதுவேனியாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இங்கா ருகினீனே, 44, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் பிரதமராக இருந்த கிண்டவுடாஸ் பலுகாஸ், தொழில்களில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான இங்கா ருகினீனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்புதான், சமூக ஜனநாயக கட்சியில் அவர் சேர்ந்தார். தேர்தலில் போட்டியிட்டு பார்லிமென்ட் உறுப்பினரான இவர், கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்நாட்டின் சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் தற்போது அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

