லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்: 22 ரன்களில் இங்கிலாந்து அணி வெற்றி
லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்: 22 ரன்களில் இங்கிலாந்து அணி வெற்றி
ADDED : ஜூலை 14, 2025 09:39 PM

லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 387 ரன்கள் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் (104 ரன்கள் )சதம் அடித்தார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகம்மது சிராஜ் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகம்மது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
193 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு, இந்திய அணி 5 வது நாளில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆட்டமிழந்தது.
நேற்று 4வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ராகுல் உடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், 9 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
எதிர் முனையில் ஆடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுல், 39 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆனார்.
இறுதி வரை ரவிந்திர ஜடேஜா 61  ரன்களுடன் போராடியும் தோல்வியை தடுக்க இயலவில்லை. ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் ப்ரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 22 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  2-1 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

