UPDATED : ஆக 03, 2024 04:24 PM
ADDED : ஆக 03, 2024 01:59 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 3வது பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வீராங்கனை மனு பாகர் நூலிழையில் பதக்கத்தை தவற விட்டார்.
பாரிஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர், கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் வென்ற மனு பாகர், 25 மீ., பிஸ்டல் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால், அவர் மூன்றாவது இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று ( ஆக.,03) நடந்த இறுதிப் போட்டியில், மனு பாகர் நான்காவது இடத்தை பிடித்தார். இதனால் இவர் 3வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
வேதனை
மனுபாகர் கூறியதாவது: இறுதிப் போட்டியில் சற்று பதற்றமாக இருந்தேன். இரண்டு நாள் எனக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டு பதக்கங்கள் வென்றதில் மகிழ்ச்சிதான். இருப்பினும் 25 மீ பிஸ்டல் பிரிவில் 4வது இடத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.