தீ எரிந்தபடியே 8 கிமீ சென்ற சரக்கு லாரி: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய டிரைவர்
தீ எரிந்தபடியே 8 கிமீ சென்ற சரக்கு லாரி: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய டிரைவர்
ADDED : ஆக 17, 2025 09:56 PM

அங்காரா: துருக்கியில் தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி, 8 கிமீ தூரம் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
துருக்கியின் சாம்சன் நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றியபடி, லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக லாரியில் பிடித்த தீ மளமளவென பரவியது.
இதை அறிந்த டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார். வாகனத்தின் பிரேக்குகள் செயல் இழந்ததால் நிறுத்த முடியாமல் ஓட்டிச் சென்றார்.
ஒரு கட்டத்தில், நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் லாரியை மோதவிட்டு நிறுத்தினார். அதற்குள் வாகனம் கிட்டத்தட்ட 8 கிமீ தொலைவு கடந்துவிட்டது. இந்த 8 கிமீ தூரமும் லாரி எரிந்த நிலையிலேயே சென்றது.
தடுப்புச்சுவரில் லாரியை மோதவிட்டு நிறுத்திய டிரைவர், லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.