மெக்கா பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம்: ஈரானுக்கும் அழைப்பு!
மெக்கா பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம்: ஈரானுக்கும் அழைப்பு!
ADDED : ஆக 23, 2026 10:59 PM
டெஹ்ரான்: பாகிஸ்தான்- சவுதி அரேபியா- துருக்கி இடையிலான சமீபத்தில் கையெழுத்தான மெக்கா கூட்டு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எந்த நாடு அழைப்பு விடுத்தது என்பது பற்றி தகவல் ஏதுமில்லை.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கும், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இடையே ஏற்கனவே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளில் எந்த ஒரு நாட்டின் மீதாவது ஆயுதமேந்திய தாக்குதலை பிற நாடுகள் மேற்கொள்ளுமாயின் அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும். இந்த ஒப்பந்தத்தில் பிற முஸ்லிம் நாடுகளையும் இணைக்கும் முயற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டு வந்தது. இதன்படி, சமீபத்தில் இந்த பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தில் மற்றொரு மேற்காசிய நாடான துருக்கி இணைந்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இணையும்படி அமெரிக்காவுடன் போரிட்டு வரும் ஈரானுக்கும் அழைப்பு வந்து உள்ளது.இதனை உறுதிசெய்துள்ள ஈரான், இந்த ஒப்பந்தத்தில் இணைவதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாக ஈரான் பார்லிமென்ட் அலுவலக அதிகாரி மெஹ்தி ரஹிமி என்பவர் லெபனானை சேர்ந்த செய்தி ஊடகத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார்அதேநேரத்தில் இந்த அழைப்பை எந்த நாடு அனுப்பியது என்பது பற்றி மெஹ்தி ரஹிமி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த அமைப்பில் உள்ள பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகள் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
