தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ டிரம்ப் நிகழ்ச்சிகளை புறக்கணித்த ஊடகங்கள்

டிரம்ப் நிகழ்ச்சிகளை புறக்கணித்த ஊடகங்கள்

டிரம்ப் நிகழ்ச்சிகளை புறக்கணித்த ஊடகங்கள்

1


ADDED : செப் 22, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 05:53 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், சில டிவி செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதித்தது. இதையடுத்து, முன்னணி அமெரிக்க செய்தி ஊடகங்கள் டிரம்ப் குறித்த ஒளிபரப்பை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன.

வேண்டுமென்றே எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, ‘சி.என்.என்., – எம்.எஸ்., நவ் – பொலிடிகோ’ உட்பட குறிப்பிட்ட சில டிவி செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதை தடை செய்து, அவற்றின் பத்திரிகையாளர்களுக்கான அனுமதியை சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

இதையடுத்து, அதிபரின் பங்கேற்கும் நிகழ்வுகளின் வீடியோ ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தடைவிதிக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் அறிவித்தன. இந்த முடிவுக்கு முக்கிய அச்சு ஊடகங்கள் மற்றும் புகைப்பட இதழியல் செய்தி நிறுவனங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தன. மேலும், அவைகளும் அதிபரின் நிகழ்வுகளை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.

இதற்கிடையே, அதிபர் டிரம்பின் தடையை எதிர்த்து தடைசெய்யப்பட்ட முக்கிய ஊடகங்கள் நீதிமன்றத்த்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன. அதிபரின் முடிவு அரசியலமைப்புக்கு முரணான கண்ணோட்ட பாகுபாடாகும் என்றும், பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. இது ஊடகங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டியுள்ளன.

இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், எதிர்மறையான, போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்களை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us