மருத்துவ அவசரம்; விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
மருத்துவ அவசரம்; விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
UPDATED : ஜன 15, 2026 07:24 PM
ADDED : ஜன 15, 2026 07:22 PM

லண்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மருத்துவ காரணங்களுக்காக வெளியேற உத்தரவிடப்பட்ட விண்வெளி வீரர்கள் நால்வரும் பத்திரமாக தரை இறங்கினர்.
கடந்த 1998 முதல் பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உலக நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வப்போது நிலையத்தில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அப்படி கடைசியாக சென்ற நாசா வீரர் ஜெனா கார்ட்மேன், மைக் பிங்கி, ஜப்பான் நாட்டை சேர்ந்த கிமியா யூ, ரஷ்யாவை சேர்ந்த ஒலக் பிளாட்னாவ் ஆகியோர் 167 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர்.
அவர்களது விண்வெளி நிலைய ஆய்வுக்காலம் முடிய இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. எனினும், மருத்துவ அவசர காரணம் என்று கூறி, அவர்கள் நால்வரையும் உடனடியாக பூமிக்கு திரும்ப நாசா உத்தரவிட்டது.அதன்படி விண்கலத்தில் புறப்பட்ட வீரர்கள் நால்வரும் இன்று கலிபோர்னியாவில் தரை இறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் 26 ஆண்டு கால வரலாற்றில், மருத்துவ அவசரம் என்று கூறி, வீரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது இதுவே முதல் முறை.வீரர்களில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. எனினும், அது என்ன விதமான பாதிப்பு, யாருக்கு ஏற்பட்டது என்பது பற்றி நாசா அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

