உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 25, 2026 03:49 AM

அ நிறம் | அளவு
பிரான்ஸ்: பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரான்சில் நேற்று ஏற்பட்ட திடீர் மின் வெட்டால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பிரான்சின் பினிஸ்டெர் மாகாணத்தில் நிலவிய அதீத வெப்பம் காரணமாக, மின்மாற்றி ஒன்று திடீரென பழுதடைந்து தீப்பிடித்தது. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலைமை ஓரளவு சரிசெய்யப்பட்டு வந்தாலும், இன்னும் 68,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பதாக கூறப்படுகிறது.
