டிரம்ப் மனைவியின் ரூ. 287 கோடி ஆவணப்படம்: ஜன.30ல் உலகளவில் 5000 திரையரங்குகளில் வெளீயீடு
டிரம்ப் மனைவியின் ரூ. 287 கோடி ஆவணப்படம்: ஜன.30ல் உலகளவில் 5000 திரையரங்குகளில் வெளீயீடு
ADDED : ஜன 27, 2026 09:09 PM

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப், 55, பற்றிய ஆவணப்படம் வரும் 30ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் 3வது மனைவியான மெலனியா ஒரு முன்னாள் மாடல். டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஆண்டு ஜன., 20ல் பதவியேற்றார். அதற்கு முந்தைய, 20 நாட்களை மையமாகக் கொண்டு ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
'மெலனியா' என்ற பெயரில் 1மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், ரூ.287 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மனைவி மெலனியாவின் பதவியேற்பு திட்டமிடல், வெள்ளை மாளிகை மாற்றம், குடும்ப உறுப்பினர்களுடனான தனிப்பட்ட தருணங்கள், அமெரிக்காவின் மிக சக்தி வாய்ந்த பெண்மணியாக மீண்டும் திரும்புவது போன்றவற்றை இந்தப் படம் காட்டுகிறது.
ஆவணப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்காவில் 2,000 திரையரங்குகளிலும், உலகளவில் 5,000 திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. முன்னதாக வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடலுக்கு, மெலனியா ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் டிரம்ப், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையரங்கு வெளியீட்டுக்குப் பின் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் மெலனியா ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது. இதற்காக அந் நிறுவனம் ரூ. 330 கோடி கொடுத்து அதன் உரிமையை பெற்றுள்ளது. இது ஒரு ஆவணப்படத்துக்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.

