தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மைக்ரோசாப்ட் சர்வர் முடக்கம்: அவுட்லுக், டீம்ஸ், ஓபன் ஏ.ஐ., சேவைகள் பாதிப்பு

மைக்ரோசாப்ட் சர்வர் முடக்கம்: அவுட்லுக், டீம்ஸ், ஓபன் ஏ.ஐ., சேவைகள் பாதிப்பு

மைக்ரோசாப்ட் சர்வர் முடக்கம்: அவுட்லுக், டீம்ஸ், ஓபன் ஏ.ஐ., சேவைகள் பாதிப்பு


ADDED : நவ 13, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365 மற்றும் டீம்ஸ் ஆகிய சேவைகள் உலகளவில் முடங்கின. இதன் எதிரொலியாக ஓபன் ஏ.ஐ., மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய ஏ.ஐ., சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

​அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் முதலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365, கோபைலட் மற்றும் டீம்ஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்துவதில் பயனர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. அவுட்லுக் சேவை முடங்கியது குறித்து, 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.

மைக்ரோசாப்ட் 365, டீம்ஸ் தளங்கள் செயல்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் அலுவலகப் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.

​மைக்ரோசாப்ட் 365 இணைப்புகளில் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, முன்னணி ஏ.ஐ., நிறுவனங்களான ஓபன் ஏ.ஐ., மற்றும் ஆந்த்ரோபிக் ஆகியவற்றின் மைக்ரோசாப்ட் இணைப்புச் சேவைகளும் முடங்கின. மெயில், காலண்டர் மற்றும் தேடல் கருவிகள் செயல்படவில்லை என ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிவித்தது.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்: அதிகப்படியான பயன்பாட்டால் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. சில சர்வர்கள் எதிர்பாராத விதமாகச் செயல்படாமல் போனதால், மற்ற சர்வர்களில் அழுத்தம் அதிகரித்து சேவை முடங்கியது. அனைத்து புதிய சாப்ட்வேர் மாற்றங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

​தற்போது படிப்படியாக சர்வர்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், பயனர்களுக்குச் சேவைகள் மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us