17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்
17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்
UPDATED : ஆக 27, 2024 03:12 PM
ADDED : ஆக 27, 2024 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: கடந்த 17 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளி நாடுகளுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
பாகிஸ்தான் குடியேற்ற துறையின் விவர அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2008 முதல் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்ததில் தாய்நாட்டில் இருந்து 95 லட்சத்து 56 ஆயிரத்து 507 பேர் வெளிநாடுகளை நோக்கி சென்றுள்ளனர்.
2013 முதல் 2018 வரையில் நவாஷ் ஷெரீப் ஆட்சியில் இருந்த போது அதிகம் பேர் வெளியேறி உள்ளனர். 2015 ல் மட்டும் 9 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர் . அதிகம் பேர் வேலை தேடி சென்றதாகவும், வளைகுடா நாடுகளான சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் நாடுகளுக்கு சென்றதாகவும், அடுத்தப்படியாக பிரிட்டன் சென்றதாகவும் தெரிகிறது.

