தீமைகளை நினைவூட்டும் கண்ணாடி: இஸ்ரேலில் போர்வீரர்கள் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பதிவு
தீமைகளை நினைவூட்டும் கண்ணாடி: இஸ்ரேலில் போர்வீரர்கள் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பதிவு
UPDATED : பிப் 26, 2026 04:32 PM
ADDED : பிப் 26, 2026 03:56 PM

ஜெருசலேம்: யூதர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் மனிதகுலத்திற்கு எதிரான தீமைகளை நினைவூட்டும் ஒரு கண்ணாடி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது நேற்று அவர் இஸ்ரேல் பார்லிமென்டில் (நெசட்) உரையாற்றினார். அங்கு அவருக்கு உயரிய பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில் நாஜி படையினர் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தனர். அதன் நினைவாக ஜெருசலேமில் உலக ஹோலோகாஸ்ட் நினைவு மையம் அமைக்கப்பட்டது.
இங்குள்ள நினைவு மண்டத்திற்கு இன்று பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து
உயிரிழந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்களின் புத்தகம் மற்றும் குழந்தைகள் நினைவுச் சின்னத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
அங்குள்ள வருகை குறிப்பில், இந்த நினைவுச்சின்னம் மனிதகுலத்திற்கு எதிரான தீமைகளை நினைவூட்டும் ஒரு கண்ணாடி என்று பிரதமர் மோடி தனது எழுதினார்.
அதன் பின்னர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் உடன் பிரதமர் நரேந்திர மோடி, யுவாட் வாஷெம் ஹோலோகாஸ்ட் நினைவு மையத்திற்கு சென்று இருவரும் இணைந்து ஒரு மரக்கன்றை நட்டனர்.
இந்த மரக்கன்று நடும் நிகழ்வு, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ஆழமான நட்பு மற்றும் வளர்ந்து வரும் உயர்மட்ட உறவின் குறியீடாக அமைந்தது.இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், 'இஸ்ரேல் மக்கள் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறார்கள்' என அதிபர் ஹெர்சாக் பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

