உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி; மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி தேர்வு
உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி; மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி தேர்வு
UPDATED : செப் 20, 2024 01:15 PM
ADDED : செப் 20, 2024 12:54 PM

நியூயார்க்: உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
நியூஜெர்ஸியில் உலகளாவிய மிஸ் இந்தியா-2024 அழகிகள் போட்டி நடந்தது. உலகம் முழுவதும் வாழும் இந்திய அழகிகள் பலர் பங்கேற்றனர். நியூயார்க்கில் உள்ள இந்தியன் திருவிழா கமிட்டியினர் இந்த போட்டியை நடத்தினர். இந்த அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த த்ருவி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப படிப்பை மேற்கொண்டுள்ள அவர், அழகிகள் போட்டியில் வெற்றி பெற்றார். இது குறித்து த்ருவி கூறுகையில்; நான் வெற்றி பெற்றது மிக பெரிய ஆச்சரியமாகவும், பெரும் கிரீடம் கிடைத்திருப்தாகவும் உணர்கிறேன் ' பாலிவுட் நடிகையாக வேண்டும் என்பதே இலக்கு, மேலும் ஐ.நா., கலாசார மைய தூதராக வேண்டும் என்றும் சொல்கிறார் இவர்.
அமெரிக்காவின் ஸ்ரிநேம் என்ற பகுதியை சேர்ந்த லிசா அப்டோல் ஹக் 2வதாகவும், நெதர்லாந்தை சேர்ந்த மாளவியா ஷர்மா 3வதாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.