UPDATED : நவ 17, 2024 01:20 PM
ADDED : நவ 17, 2024 11:24 AM

மெக்சிகோ: டென்மார்க்கின் விக்டோரியா கேர் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்று, 73வது மிஸ் யுனிவர்ஸ் என்ற பெருமையைப் பெற்றார்.
2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 பேர் போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சுற்றில், டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர்.
இறுதி சுற்றில், டென்மார்க்கின் விக்டோரியா கேர் வெற்றி பெற்றார். இவர் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று, 73வது மிஸ் யுனிவர்ஸ் என்ற பெருமையைப் பெற்றார். 2வது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மாவுக்கு கிடைத்தது.
மூன்றாவது இடத்தை மெக்சிகோவை சேர்ந்த மரியா பெர்னாண்டா தட்டிச் சென்றார். 4வது இடம் தாய்லாந்தை சேர்ந்த சுசாடா சுவாங்கிரிவுக்கும், 5வது இடம் வெனிசுலாவை சேர்ந்த இலியானா மார்க்கஸ்க்கும் கிடைத்துள்ளன. மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்ற, டென்மார்க்கின் விக்டோரியா கேர்வுக்கு, சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
யார் இந்த விக்டோரியா கேர்?
* டென் மார்க்கை சேர்ந்தவர் விக்டோரியா கேர். இவருக்கு வயது 21.
* இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் நடன கலைஞர்.
* இவர் பிசினஸ் மற்றும் மார்கெட்டிங்கில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
* டென் மார்க்கை சேர்ந்தவர், முதல் முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற பெருமை விக்டோரியா கேர்வுக்கு கிடைத்துள்ளது.