sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் முக்கிய நகரில் ஏவுகணை தாக்குதல்; ஏர் இந்தியா விமான சேவை ரத்து

/

இஸ்ரேல் முக்கிய நகரில் ஏவுகணை தாக்குதல்; ஏர் இந்தியா விமான சேவை ரத்து

இஸ்ரேல் முக்கிய நகரில் ஏவுகணை தாக்குதல்; ஏர் இந்தியா விமான சேவை ரத்து

இஸ்ரேல் முக்கிய நகரில் ஏவுகணை தாக்குதல்; ஏர் இந்தியா விமான சேவை ரத்து

8


ADDED : மே 04, 2025 06:15 PM

Google News

ADDED : மே 04, 2025 06:15 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல் அவிவ்: இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தின் மீது ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருதரப்பினரும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுபோன்ற ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருந்த போதும், ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் ராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும், டெல் அவிவ் நகரில் இருந்து டில்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தையும் இன்று ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us