காணாமல் போன இந்திய மாணவி ஸ்காட்லாந்து ஆற்றில் சடலமாக மீட்பு
காணாமல் போன இந்திய மாணவி ஸ்காட்லாந்து ஆற்றில் சடலமாக மீட்பு
ADDED : டிச 30, 2024 03:22 PM

லண்டன்: காணாமல் போன 22 வயது கேரள மாணவியின் உடல் ஸ்காட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹெரியட்- வாட் பல்கலைகழகத்தில் படித்துவந்த இந்திய மாணவி கேரளாவை சேர்ந்த சண்ட்ரா சஜூ, இம்மாத தொடக்கத்தில் காணாமல் போனார். காணாமல் போன சஜூ வின் உடல் எடின்பர்க்கில் உள்ள கிராமத்தில் நியூபிரிட்ஜ் அருகே ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து சம்பவம் குறித்து ஸ்காட்லாந்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து ஸ்காட்லாந்து போலீசார் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை நியூபிரிட்ஜ் அருகே, ஆற்றில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் காணாமல் போன சண்ட்ரா சஜூவின் உடையதாக கருதி, அவருடைய குடும்பத்தினரிடம் தகவல் கொடுத்துள்ளோம்.
இறப்பு குறித்து விசாரணை அமைப்புக்கு அறிக்கை அனுப்பப்படும்.
சஜூ கடந்த டிச.6 ஆம் தேதி மாலை, லிவிங்ஸ்டன் ஆல்மண்ட்வலே உள்ள அஸ்டா சூப்பர் மார்க்கெட் கடையில் பொருட்கள் வாங்கியது அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகி உள்ளது. அதன் பிறகு எப்படி அவர் இறந்து போனார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

