உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 14, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
அங்காரா: துருக்கியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்காசிய நாடான துருக்கியின் மத்திய பகுதியில், நேற்று அதிகாலை, 3:35 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டோகட் மாகாணத்தில் நிக்சார் பகுதியை மையமாக வைத்து, 6.4 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை. துருக்கி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. 2023ல், துருக்கியில் ஏற்பட்ட தெற்கு நிலநடுக்கத்தால், 53,000 பேர் பலியாகினர்.
