உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 28, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
பீஜிங், ஆக. 29–
நம் அண்டை நாடான சீனாவில் நேற்று, 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் லாங்சாங் நகரில், நேற்று பிற்பகல் நிலநடுக்கம் பதிவானது. லாங்சாங் மட்டுமின்றி, செங்டூ, சோங்கிங் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதம் அல்லது உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
