மோடி இத்தாலி வருகை : காந்தி சிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
மோடி இத்தாலி வருகை : காந்தி சிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
UPDATED : ஜூன் 12, 2024 07:26 PM
ADDED : ஜூன் 12, 2024 06:54 PM

மிலன்: இத்தாலியில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க வர உள்ள நிலையில் அங்கு தேசத்தந்தை காந்தி சிலை காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் 13ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி இந்த வாரம் இத்தாலி செல்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இத்தாலியில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். சிலை பீடத்தில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. முன்னதாக கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதை கண்டித்து காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி இத்தாலி வருகை தரும் நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.