தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ செஷல்ஸ் தீவு நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 செஷல்ஸ் தீவு நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 செஷல்ஸ் தீவு நாட்டில் மோடிக்கு உற்சாக வரவேற்பு


ADDED : ஜூன் 28, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்டோரியா: கிழக்கு ஆப்ரிக்க தீவு நாடான செஷல்ஸுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான செஷல்ஸின் பொன்விழாவில் பங்கேற்பதற்காக நம் பிரதமர் மோடி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக செஷல்ஸ் தலைநகர் விக் டோரியாவுக்கு நேற்று சென் றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மனி, விமான நிலையத்திற்கு நேரில் வந்து, மோடியை ஆரத்தழுவி வரவேற்றார்.

இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் விக்டோரியாவில் உள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு சென்றனர். அங்கு ராட்சத ஆமைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, புகழ்பெற்ற, 'அல்டாப்ரா' வகை ராட்சத ஆமைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும், 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றனர்.

இதற்காக செஷல்ஸ் நாட்டின் தேசிய இலச்சினையில் இடம்பெற்றுள்ள அந்நாட்டின் தனித்துவமிக்க, 'கோகோ டி மெர்' என்ற பனை வகை மரக்கன்றை பிரதமர் மோடியும், அதிபர் பேட்ரிக் ஹெர்மனியும் நட்டனர்.

இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 'பூமியில் வாழும் உயிரினங்களிலேயே, 200 ஆண்டுகளுக்கு மேல், நீண்ட ஆயுள் கொண்டதாக, 'அல்டாப்ரா' ராட்சத ஆமைகள் விளங்குகின்றன' என குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, 'ஜோனதன்' எனப்படும், 194 வயதுடைய உலகிலேயே மிக பழமையான ஆமைக்கு பிரதமர் மோடி இந்த தாவரவியல் பூங்காவில் உணவளித்து மகிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகின.

'ஜோனதன்' ஆமை மேற்கு ஆப்ரிக்காவின் பிரிட்டிஷ் தீவுப் பகுதியான செயின்ட் ஹெலனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us