வங்கதேச இந்து தலைவர்களுடன் முகமது யூனுஷ் சந்திப்பு
வங்கதேச இந்து தலைவர்களுடன் முகமது யூனுஷ் சந்திப்பு
ADDED : ஆக 13, 2024 07:31 PM

டாக்கா: மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என வங்கதேச இந்து தலைவர்களை சந்தித்து அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் உறுதி அளித்தார்.
வங்கதேசத்தில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டின் முக்கிய அடையாளங்கள், கோவில்கள், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் 15 பேர் உறுப்பினர்களாக கொண்ட இடைக்கால அரசு பொறுப்பேற்றது..
முன்னதாக வங்கதேசத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் அவர்களின் வழிபாட்டு தலங்கள், கோயில்கள் தாக்கப்பட்டன. இந்து அரசியல் பிரமுகர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இச்செயலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று டாக்காவில் பிரசித்தி பெற்ற தாகேஷ்வரர் கோயிலுக்கு வருகை தந்த முகமது யூனுஷ், இந்து அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் கூறியது, இங்கு நாம் அனைவரும் ஒரே மக்கள். நமக்குள் எந்த பாகுபாடு காட்ட வேண்டாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல், மதப்பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

