மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி
மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி
ADDED : டிச 16, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரபாட்:: மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி: வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவின் அட்லாண்டிக் கடற்கரையோர மாகாணமான சபியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் 37 பேர் பலியாகினர்; காயமடைந்த, 14 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கே வரலாற்று சிறப்புமிக்க பழைய நகரத்தில் 70 வீடுகளும், வணிக நிறுவனங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

