எம்.பி.,க்கள் மோதல் - அடிதடி : ரணகளமான துருக்கி பார்லிமென்ட்
எம்.பி.,க்கள் மோதல் - அடிதடி : ரணகளமான துருக்கி பார்லிமென்ட்
ADDED : ஆக 18, 2024 01:31 AM

அங்காரா: துருக்கி பார்லிமெட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கியில் ஆளும் கட்சியாக ஏ.கே.பி. கட்சி உள்ளது .இதன் தலைவராக அதிபர் ரீசெப் தைப்பி எர்டோகன் .உள்ளார். இங்கு பிரதான எதிர்கட்சியாக தொழிலாளர் கட்சி உள்ளது.
இக்கட்சியைச் சேர்ந்த அட்டாலே என்பவர் மீது கடந்த 2013-ல் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2022ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் அட்டாலே வெற்றி பெற்று எம்.பி.யானார். எனினும் அவரை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அட்டாலேவை சபையில் பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாக நடந்த விவாதம் கைகலப்பில் முடிந்தது.
அப்போது ஆளும், எதிர்கட்சிகள் எம்.பி.க்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஆளும் கட்சி எம்.பி., ஒருவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அகமது சேக் கண்ணத்தில் ‛பளார்' விட்டதில் அவர் காயமடைந்தார். சில எம்.பி.க்களுக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. பெண் எம்.பி.க்களும் தாக்கப்பட்டனர். இதனால் பார்லிமென்ட் ரத்த களறியாக மாறியது. இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
*****************

