sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிர்ச்சி

/

வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிர்ச்சி

வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிர்ச்சி

வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிர்ச்சி

13


ADDED : பிப் 10, 2026 03:36 PM

Google News

13

ADDED : பிப் 10, 2026 03:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாகா: வங்கதேசத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஹிந்து வியாபாரி ஒருவரை அவரது கடையில் வைத்து மர்ம நபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில், பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, அங்கு சிறுபான்மையினராக இருக்கும், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் தொடர்கிறது. இதற்கு அஞ்சி அந்நாட்டில் இருந்து பலர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு வசிக்கும் சிறுபான்மையினராக வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பல முறை வலியுறுத்திய போதும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்த சூழ்நிலையில், வங்கதேசத்தில் நாளை மறுநாள்( பிப்ரவரி 12) பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹிந்து மதத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான விவரம் பின்வருமாறு:வங்கதேசத்தின் தெற்கு கந்தா கிராமத்தை சேர்ந்தவர் சுசென் சந்திர சர்கார்(62). அரிசி வியாபாரி மற்றும் சிறு வணிகத்தில் ஈடுபட்டு உள்ளார். போகர் பஜார் பகுதியில் கடை வைத்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சர்காரை கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொன்று விட்டு, உடலை கடைக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பிச் சென்றனர் . தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us