ADDED : மே 15, 2024 04:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே என்ற 66 வயது பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இவர் அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். எட்ஜ்வேர் பகுதியில் பஸ் நிறுத்தத்தில் அவர் காத்திருந்த போது இந்த கொலை நடந்தது. அவரது மார்பு, கழுத்து பகுதியில் கத்தியால் ஜலால் டெபெல்லா என்ற 22 வயது இளைஞர் கத்தியால் குத்தினார். அதில் அனிதா முகெவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி அளித்த போதும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

