போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முர்மு
போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முர்மு
ADDED : ஏப் 26, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாட்டிகன் சிட்டி: கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் கடந்த 21ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக, அங்குள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக, நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாட்டிகன் சிட்டிக்கு நேற்று சென்றார். அங்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு, அவர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியன் சென்றுள்ளனர்.

