மலைப்பாம்புகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நபர்: வைரலாகும் வீடியோ
மலைப்பாம்புகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நபர்: வைரலாகும் வீடியோ
ADDED : செப் 16, 2024 11:25 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் வனவிலங்குகள் அருங்காட்சியகத்தை நடத்தி வருபவர், மலைப்பாம்புகளுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
உலகில் பெரும்பாலான மக்கள் தங்களது பிறந்த நாளை, குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். ஒரு சிலர் அன்றைய தினம் வெளியூர், வெளிநாட்டிற்கும் சென்று வருவர். இன்னும் சிலர் அன்றைய நாளை ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள். அந்த வகையில் ஒரு நிகழ்வு அமெரிக்காவில் அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் 'தி ரெப்டைல் ஜூ' என்ற விலங்குகள் அருங்காட்சியகம் உள்ளது. இதனை, ஜே பிரேவர் என்பவர் தோற்றுவித்து நிர்வகித்து வருகிறார். அவர், தனது பிறந்த நாளை மலைப்பாம்புகளுடன் சேர்ந்து கொண்டாடிய படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இது ஒரு பாம்பு விருந்து. இன்று எனது பிறந்த நாள். நான் காட்டிய அன்பு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனை எனது நண்பர்கள் (பாம்பு) காரணமாக உருவானது எனக்கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுவரை, 7.4 லட்சம் பார்வைகளையும், 10 ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ளது.