முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பு பயங்கரவாத குழுவாக அறிவிப்பு
முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பு பயங்கரவாத குழுவாக அறிவிப்பு
ADDED : டிச 10, 2025 01:16 AM

புளோரிடா: அமெரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் மற்றும் வழக்கறிஞர் குழுக்களில் ஒன்றான, அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் என்ற அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக புளோரிடா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் மற்றும் வழக்கறிஞர் குழுக்களில் ஒன்றாக, சி.ஏ.ஐ.ஆர்., எனப்படும், அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் என்ற அமைப்பு உள்ளது.
இது இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ள, 'முஸ்லிம் சகோதரத்துவம்' என்ற அமைப்பில் தொடர்புடைய நபர்களால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
'இந்த அமைப்புகள் ஹமாஸ் மற்றும் 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீதான தாக்குதலில் தொடர்பு உடையவை' என, அமெரிக்காவின் புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசான்டிஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும், முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளார்.

