எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது: அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!
எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது: அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!
ADDED : மே 29, 2025 07:12 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக சமூக வலைதளத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கமான நண்பர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து இவர் தீவிர பிரசாரம் செய்தார்.
டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன. மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில் இன்று (மே 29) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.