தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ மியான்மர் தேர்தல் நடத்தி ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

 மியான்மர் தேர்தல் நடத்தி ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

 மியான்மர் தேர்தல் நடத்தி ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்


ADDED : ஜன 28, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆதரவு பெற்ற யு.எஸ்.டி.எப்., எனப்படும் யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக அரசைக் கவிழ்த்து, 2021ம்ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து அந்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இம்மாதம் வரை மூன்று கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 664 தொகுதிகளில் 586ல் தேர்தல் நடத்தப்பட்டது. ராணுவத்திற்கு, 25 சதவீத இடங்கள் தானாக ஒதுக்கப்பட்டன.

உள்நாட்டு போரால், ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டன. இந்நிலையில் மியான்மரில் மூன்று கட்ட தேர்தலிலும், ராணுவத்தின் ஆதரவு பெற்ற யு.எஸ்.டி.எப்., கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

இறுதி முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும். ஆனால் யு.எஸ்.டி.எப்., கட்சியின் வெற்றி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. இதனால் மியான்மரில் ராணுவ ஆட்சி மீண்டும் ஜனநாயக வடிவில் தொடரும் நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய ராணுவத் தலைவர் மின் ஆங் லயிங், அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us