தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ மியான்மரில் அமைதியாக முடிந்தது இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு

 மியான்மரில் அமைதியாக முடிந்தது இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு

 மியான்மரில் அமைதியாக முடிந்தது இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு


UPDATED : ஜன 12, 2026 05:48 AM

ADDED : ஜன 12, 2026 12:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2026 05:48 AM ADDED : ஜன 12, 2026 12:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாங்கோன்: ராணுவ புரட்சி ஏற்பட்ட பின், நம் அண்டை நாடான மியான்மரில் தற்போது பொதுத் தேர்தல் நடந்து வருகிறது; நேற்று அதன் இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது.

கிழக்காசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதன்பின், அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், மூன்று கட்டங்களாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிச., 28ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.

ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளதால், ராணுவ ஆட்சிக்கு ஆதரவான கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. எனவே, இத்தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us