லண்டன் ரயில் நிலையத்துக்கு பெங்காலியில் பெயர் பலகை
லண்டன் ரயில் நிலையத்துக்கு பெங்காலியில் பெயர் பலகை
ADDED : பிப் 11, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'ஒயிட்சேப்பல்' ரயில் நிலையம் உள்ளது. கிழக்கு லண்டனுக்கு வங்கதேச சமூகத்தின் பங்களிப்பை போற்றும் வகையில், இந்த ரயில் நிலையத்தில், 'பெங்காலி' மொழி பெயர் பலகை 2022ல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கிரேட் யார்மவுத் எம்.பி., ரூபர்ட் லோவ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'இது லண்டன்; ஒயிட்சேப்பல் ரயில் நிலையத்தின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்' என, பதிவிட்டார்.
அத்துடன், பெங்காலியில் ரயில் நிலையத்தின் பெயர் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், ரூபர்ட் லோவ் கருத்தை ஆமோதிக்கும் வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், 'ஆம்' என, தெரிவித்துள்ளார்.