sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ரூ.378 கோடியில் சொகுசு விமானம் வாங்கினார் நவாஸ் ஷெரீப் மகள்

/

 ரூ.378 கோடியில் சொகுசு விமானம் வாங்கினார் நவாஸ் ஷெரீப் மகள்

 ரூ.378 கோடியில் சொகுசு விமானம் வாங்கினார் நவாஸ் ஷெரீப் மகள்

 ரூ.378 கோடியில் சொகுசு விமானம் வாங்கினார் நவாஸ் ஷெரீப் மகள்

7


ADDED : பிப் 22, 2026 12:06 AM

Google News

7

ADDED : பிப் 22, 2026 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் வாங்கியுள்ள சொகுசு விமானம், அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, அதிநவீன சொகுசு விமானத்தை வாங் கியுள்ளது.

அதிவேக செயற்கைக் கோள் இணையதள வசதி உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல் தரத்திலான வசதிகளை கொண்ட இவ்விமானத்தில், 19 பேர் வரை பயணிக்கலாம். இதன் மதிப்பு, 378 கோடி ரூபாயாகும்.

மாகாண அரசு சொகுசு விமானம் வாங்கியிருப்பது, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பாக்., கடும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் வேளையில், மக்கள் அடிப்படை தேவைகளுக்கே அவதிப்படும் போது இவ்வளவு பெரிய செலவு அவசியமா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இது மாகாண முதல்வரின் பயன்பா ட்டுக்கு அல்ல என்றும், வரும் ஏப்ரலில் துவங்க உள்ள ' ஏர் - பஞ்சாப்' என்ற மாகாண அரசு விமான நிறுவனத்திற்காக வாங்கப்பட்டுள்ளதாகவும் அம்மாகாண தகவல் துறை அமைச்சர் அஸ்மா போக்காரி தெரிவித்துள்ளார்.

முதல்வர் இவ்விமானத்தை பயன்படுத்தினால் அதற்கான முழு கட்டணமும் அரசு கருவூலத்துக்கு செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் தான் மரியம் நவாஸ். இவருடைய சித்தப்பாவான ஷெபாஸ் ஷெரீப் தற்போ து பிரதமராக உள்ளார் .

சமீ பத்தில் தன் இரண்டாவது மகன் திருமணத்தின்போது, மணப்பெண்ணைவிட மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து, தன்னை அதிகளவில் அழகுப்படுத்திக் கொண்டார் என்ற சிக்கலில் மரியம் சிக்கினார்.






      Dinamalar
      Follow us