நேபாளத்தில் பஸ் விபத்து: 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி
நேபாளத்தில் பஸ் விபத்து: 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி
ADDED : ஜன 13, 2024 01:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்ட்: நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில், இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
மத்திய மேற்கு நேபாளத்தின் பாங்கேயின் நேபால்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பஸ், பாலத்தில் இருந்து விலகி ராப்தி ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் இதுவரை காணப்பட்டுள்ளது. அதில் பீஹார் மாநிலம் மலாஹியைச் சேர்ந்த யோகேந்திர ராம்(67) மற்றும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முனே(37) ஆகியோரும் அடங்குவர். மேலும் 22 பேர் காயமுற்றனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா? என்று விசாரணை நடக்கிறது.