நேபாளம் பதிவு செய்ய தவறியதால் சமூக தளங்களுக்கு தடை
நேபாளம் பதிவு செய்ய தவறியதால் சமூக தளங்களுக்கு தடை
ADDED : செப் 07, 2025 01:05 AM
காத்மாண்டு:புதிய விதிமுறைகளின்படி, அரசிடம் பதிவு செய்யத் தவறியதால் முன்னணி சமூக வலைதளங்களான, 'யு டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்டவற்றுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடு களை கண்காணிக்கவும் அந்நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது. இவ்விதிமுறைகளின் கீழ், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களை பதிவு செய்ய அந்நாட்டு அரசு, ஏழு நாள் அவகாசம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அவகாசம் முடிவ டைந்தும், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், யு டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை. இதையடுத்து இவற்றை முடக்கி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை முடக்கப்பட்டுள்ளன. அரசின் இம்முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.