தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ நேபாளம் விமான டயர் வெடித்தது 288 பேர் உயிர் தப்பினர்

 நேபாளம் விமான டயர் வெடித்தது 288 பேர் உயிர் தப்பினர்

 நேபாளம் விமான டயர் வெடித்தது 288 பேர் உயிர் தப்பினர்


ADDED : மே 12, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, 'துருக்கி ஏர்லைன்ஸ்' விமானத்தின் டயர் திடீரென வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து 277 பயணியர், 11 ஊழியர்கள் என 288 பேருடன் நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிற்கு நேற்று அதிகாலை துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.

காலை 6:36 மணியளவில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஓடுதளத்தை தொட்ட அடுத்த சில வினாடிகளில், விமானத்தின் வலது பக்க பின் சக்கரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

உராய்வு காரணமாக தீப்பிடித்து சக்கரம் வெடித்ததால் விமானம் குலுங்கியது. இதைக் கண்ட பயணியர் பீதியில் அலறத் தொடங்கினர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us