தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ முன்னாள் மன்னர் மீது நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

முன்னாள் மன்னர் மீது நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

முன்னாள் மன்னர் மீது நேபாள பிரதமர் குற்றச்சாட்டு


ADDED : ஏப் 01, 2025 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காத்மாண்டு : “நேபாளத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா சீர்குலைக்கிறார்,” என, அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் பிரதமராக இருப்பவர் ஷர்மா ஒலி. இவர் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இங்கு, முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ல் நடந்த போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி அமலுக்கு வந்தது.

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

இதில், வன்முறை வெடித்ததால், அரசு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. கட்டுக்கடங்காமல் பரவிய கலவரத்தில் 'டிவி' ஒளிப்பதிவாளர் உட்பட இருவர் பலியாகினர்.

இந்த விவகாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மன்னராட்சி தொடர்பான கலவரங்கள் தீவிரமடைவதற்கு முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, கடந்த மாதம் 19ம் தேதி வெளியிட்ட வீடியோவே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில், காத்மாண்டு கலவரம் அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் ஷர்மா ஒலி கூறியதாவது:

வங்கிக் கடன் செலுத்த மறுக்கும் நபர்களுடன் கூட்டணி வைத்துள்ள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, மீண்டும் மன்னராட்சி மலர வேண்டும் என்பதால் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுதும் கலவரத்தை அவர் துாண்டிவிடுகிறார். காத்மாண்டுவின் டிங்குனேவில் நடந்த கலவரங்களுக்கு அவரே காரணம். ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையம், எரிபொருள் கிடங்கு ஆகியவற்றுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்தினர்.

மீண்டும் மன்னராக வேண்டும் என நினைக்கும் ஞானேந்திர ஷா, இந்த கலவரம் குறித்து பதிலளிக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைக்கு ஈடானதாக கருதப்படும் இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது. இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பார்லி.,யில் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஞானேந்திர ஷாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us