நேபாளம், திபெத்தில் திடீர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
நேபாளம், திபெத்தில் திடீர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
ADDED : ஏப் 15, 2025 12:45 PM

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ஜாப்பா மாவட்டத்தில் இன்று(ஏப்.15) அதிகாலை 4.39 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 4 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் ஏதேனும் பொருள் அல்லது உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
திபெத்திலும் இன்று(ஏப்.15) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் .ஏற்பட்டதை அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், திபெத்தில் 3.5 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
அண்மையில் மியான்மரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.