தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ மீண்டும் மன்னராட்சி வேண்டும் நேபாள மக்கள் கோஷம்

 மீண்டும் மன்னராட்சி வேண்டும் நேபாள மக்கள் கோஷம்

 மீண்டும் மன்னராட்சி வேண்டும் நேபாள மக்கள் கோஷம்


ADDED : பிப் 15, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நம் அண்டை நாடான நேபாளத்தில் 240 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மன்னராட்சி, கடந்த 2008ல் முடிவுக்கு வந்தது. அங்கு மன்னராக இருந்த ஞானேந்திர ஷா, பொதுவாழ்வில் இருந்து விலகி ஒரு சாதாரண குடிமகன் போலவே வாழ்ந்து வருகிறார்.

நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த இளைஞர் போராட்டத்தால், பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பிரதமராக பதவியேற்றார்.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அடுத்த மாதம் 5ம் தேதி, அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மன்னர் ஞானேந்திர ஷா, கிழக்கு நேபாளத்தில் மூன்று மாத கால சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகர் காத்மாண்டுவுக்கு நேற்று திரும்பினார். அவரை வரவேற்க திரிபுவன் சர்வதேச விமான நிலையம் முதல் அவரது இல்லம் வரை ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது, 'ராஜா திரும்பி வாருங்கள்; நாட்டைக் காப்பாற்றுங்கள்; முடியாட்சியை மீட்டெடுங்கள்' என்று முழக்கமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us