போராட்டக்காரர்களால் தெருவில் துரத்தி, தாக்கப்பட்ட நேபாள நிதியமைச்சர்
போராட்டக்காரர்களால் தெருவில் துரத்தி, தாக்கப்பட்ட நேபாள நிதியமைச்சர்
ADDED : செப் 09, 2025 04:44 PM

காத்மாண்டு: நேபாளத்தில் நடைபெறும் போராட்டத்தின் மத்தியில் அந்நாட்டு நிதியமைச்சர் போராட்டக்காரர்களால் தெருவில் தாக்கப்பட்டார்.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடையால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்களில் நேற்று 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடரும் போராட்டங்களால் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து வெளியான வீடியோவில்,நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல் சாலையில் துரத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.
நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா ஆகியோரும் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பை வழங்க நேபாள ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.