தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சுழற்சி முறையில் இஸ்ரேல் பிரதமர் பதவி எதிரணியுடன் பகிர நெதன்யாகு சம்மதம்

சுழற்சி முறையில் இஸ்ரேல் பிரதமர் பதவி எதிரணியுடன் பகிர நெதன்யாகு சம்மதம்

சுழற்சி முறையில் இஸ்ரேல் பிரதமர் பதவி எதிரணியுடன் பகிர நெதன்யாகு சம்மதம்


UPDATED : நவ 28, 2026 08:52 PM

ADDED : நவ 28, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 08:52 PM ADDED : நவ 28, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெருசலேம்: இஸ்ரேலில், புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், சுழற்சி முறையில் பிரதமர் பதவியை எதிரணியுடன் பகிர காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலில், அக்., 27ல் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 120 இடங்களுடைய பார்லிமென்டில், ஆட்சியமைக்க, 61 இடங்கள் தேவை. இதில், பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணி, 53; முன்னாள் ராணுவ தளபதி ஐசன்கோட்டின் யாஷர் கட்சி தலைமையிலான கூட்டணி, 48; அரபு கட்சிகள் 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க இரு தலைவர்களும் மறுத்துவிட்டனர். தற்போது காபந்து பிரதமராக நெதன்யாகு தொடர்கிறார்.

இந்நிலையில், ஆட்சி அமைக்க வரும்படி ஐசன்கோட்டுக்கு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்தார். இதற்காக டிச., 6 வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அவர் ஆட்சியமைக்க தவறினால், நெதன்யாகுவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இருவருமே பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

இதை தவிர்க்க நெதன்யாகு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதன்படி, நான்காண்டுகளை கொண்ட பிரதமர் பதவியில், முதலிரண்டு ஆண்டுகள் ஐசன்கோட்டும், அதைத்தொடர்ந்து இரு ஆண்டுகள் தானும் பிரதமராக சுழற்சி முறையில் பதவி வகிக்க நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து, ஐசன்கோட் தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ஐசன்கோட் ஏற்க மாட்டார் என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us