அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்: நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்: நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
ADDED : அக் 28, 2024 07:32 AM

ஜெருசலேம்: ஈரான் மீதான தாக்குதல் அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக அடைந்து விட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஈரான் முழுவதும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ராணுவத் தளங்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்ட இடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.
துல்லியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருந்தது. ஈரான் மீதான தாக்குதல் அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக அடைந்து விட்டது. இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
சக்தியை காட்டணும்!
இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியதாவது: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்துக் கூறவோ கூடாது. ஈரான் குறித்து தப்புக் கணக்கு போட்டு வருகின்றனர். ஈரானின் சக்தியை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும்.
அந்த சக்தியை எப்படிக் காட்டுவது? தாக்குதலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? ஈரான் நலனுக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து ஈரான் ராணுவ அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும். இதை செய்ய வேண்டியது ஈரான் அரசின் கடமையாகும்; நாட்டை காக்க இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

