sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் புதிய ராணுவ அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்

/

ஈரான் புதிய ராணுவ அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்

ஈரான் புதிய ராணுவ அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்

ஈரான் புதிய ராணுவ அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்

7


UPDATED : மார் 03, 2026 09:46 PM

ADDED : மார் 03, 2026 06:57 PM

Google News

7

UPDATED : மார் 03, 2026 09:46 PM ADDED : மார் 03, 2026 06:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரானின் புதிய ராணுவ அமைச்சர், பதவியேற்ற 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இவ்விரு நாடுகளின் அதிரடி தாக்குதலுக்கு ஈரான் மதகுரு ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டார்.

ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் அலுவலக கட்டடத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்தது. இனிமேல்தான் தாக்குதல் தீவிரம் அடையும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

இந் நிலையில் ஈரான் புதிய ராணுவ அமைச்சராக புரட்சிகர காவல்படையின் ஜெனரல் சையத் மஜித் எபின் அல்ரசா பதவியேற்றார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தாக்குதல் டெஹ்ரானில் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் சையத் மஜித் எபின் அல்ரசா கொல்லப்பட்டுவிட்டார் என்று ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அமீர் சனிர்சாதே ராணுவ அமைச்சராக இருந்தார். அவர் கொல்லப்பட்டதால் புதிய ராணுவ அமைச்சராக சையத் மஜித் எபின் அல்ரசா நியமிக்கப்பட தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us