தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/''அதிவேகமாக உருமாற்றம் அடையுது குரங்கம்மை திரிபு'': எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

''அதிவேகமாக உருமாற்றம் அடையுது குரங்கம்மை திரிபு'': எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

''அதிவேகமாக உருமாற்றம் அடையுது குரங்கம்மை திரிபு'': எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


ADDED : ஆக 27, 2024 01:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 01:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றம் அடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் பரவி உள்ளது. 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று, உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. 1970களில் ஆப்ரிக்காவில் அவ்வப்போது பரவும் இந்த தொற்று 2022ல் தான் உலகின் மற்ற நாடுகளிலும் பரவத் துவங்கியது. அதன்பிறகே உலக நாடுகளின் கவனம் பெற்று, பொது சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்தாண்டில் மட்டும் காங்கோவில் சுமார் 18 ஆயிரம் பேருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டதாகவும், அதில் 615 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றம் அடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி விஞ்ஞானிகள் தெரிவிப்பதாவது: குரங்கம்மை வைரஸ், பெரியம்மை தொற்றில் இருந்து உருவாகியுள்ளது.

அதிவேக உருமாற்றம்


50 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரியம்மை தொற்று பரவியபோது, தடுப்பூசி செலுத்தப்பட்டு படிப்படியாக தொற்று முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது குரங்கம்மை தொற்றாக உருவெடுத்துள்ளது. குரங்கம்மையை பற்றி ஆராய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

அதன் திரிபு அதிவேகமாக உருமாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எம் பாக்ஸ் தடுப்பதற்குள் வேகமாக பரவுகிறது; கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு திறன் கொண்டர்களை எளிதில் தாக்குவதுடன், உயிரிழக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us