sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

/

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

16


ADDED : ஏப் 10, 2025 04:24 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:24 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனாவை தவிர்த்து, 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது. இதனால், சீனாவுக்கான வரியை, நேற்று முன்தினம் 104 சதவீதமாக உயர்த்தினார். சீனா விடாப்பிடியாக அமெரிக்காவுக்கான வரியை, 84 சதவீதமாக உயர்த்தியது.

இந்நிலையில், சீனாவை தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


சீனா உலக சந்தைகளுக்கு காட்டிய மரியாதையின்மையின் காரணமாக, அந்நாட்டுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை, 125 சதவீதமாக உயர்த்தியுள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வரும். மறுபுறம், 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி, பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.

இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக எந்த விதத்திலும் பதிலடி கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் 10 சதவீதம் என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us