sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாள தேர்தலில் புதிய அலை! பழைய கட்சிகளை வீழ்த்தி பிரதமராகிறார் 35 வயது பாடகர் பாலேந்திர ஷா

/

நேபாள தேர்தலில் புதிய அலை! பழைய கட்சிகளை வீழ்த்தி பிரதமராகிறார் 35 வயது பாடகர் பாலேந்திர ஷா

நேபாள தேர்தலில் புதிய அலை! பழைய கட்சிகளை வீழ்த்தி பிரதமராகிறார் 35 வயது பாடகர் பாலேந்திர ஷா

நேபாள தேர்தலில் புதிய அலை! பழைய கட்சிகளை வீழ்த்தி பிரதமராகிறார் 35 வயது பாடகர் பாலேந்திர ஷா

2


ADDED : மார் 09, 2026 12:59 AM

Google News

2

ADDED : மார் 09, 2026 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாள அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக, இளம் தலைமுறையினர் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளனர். அவர் களின் பிரதிநிதியாக களமிறங்கிய 'ராப்' பாடகர் பாலேந்திர ஷா, 35, தலைமையிலா ன ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி, நேரடி தேர்தல் நடந்த 165 தொகுதிகளில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ல் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்தது. ஏற்கனவே அங்கு ஊழல், வேலையில்லா திண்டாட்டம் குறித்து அதிருப்தியில் இருந்த இளைஞர்கள் இதற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. 76 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

அபாரம்


அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி நேபாள பார்லிமென்ட்டுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்களான சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் யு.எம்.எல்., கட்சி, புஷ்ப கமல் தாகல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன், 2022ல் துவங்கப்பட்ட 'ராப்' பாடகர் பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., கட்சி போட்டியிட்டது.

நேபாள பார்லிமென்ட்டுக்கு மொத்தம் 275 உறுப்பினர்கள். அவர்கள் இரண்டு முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 165 தொகுதிகளில் மக்கள் நேரடியாக ஓட்டளித்து எம்.பி.,க்களை தேர்வு செய்வர். மீதமுள்ள 110 இடங்களுக்கான எம்.பி.,க்கள், கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், விகித்தாச்சார முறையில் நிரப்பப்படும்.

நாடு சந்தித்த மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் நடந்த தேர்தல் என்பதால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த 5ம் தேதியே ஓட்டு எண்ணிக்கையும் துவங்கியது. 6ம் தேதி முதல் முடிவுகள் வெளியாக துவங்கின.

முழுமையான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நேரடி தொகுதிகளில் 165ல் 125 இடங்களை கைப்பற்றி, பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி., கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 25 லட்சத்துக்கு மேலான ஓட்டுகளையும் பெற்றுள்ளது . பிற கட்சிகள் எதுவும் 10 லட்சம் ஓட்டுகளை தாண்டவில்லை.

முற்றுப்புள்ளி


பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை. பிரதிநிதிகள் சபையில் ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.பி., கட்சிக்கு 50க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். இதன் மூலம் பாலேந்திர ஷா நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார். நேபாள பார்லிமென்ட் வரலாற்றில் இளம் வயதில் பிரதமர் பதவி வகிக்க உள்ள தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை எதிர்த்து ஜாபா - 5 என்ற தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, 50,000 ஓட்டு வித்தியாசத்தில் அவரை தோற்கடித்தார். மற்றொரு முன்னாள் பிரதமரான மாதவ் நேபாள் என்பவரும் ஆர்.எஸ்.பி., வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.

இந்தத் தேர்தலில், 10 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் ஆர்.எஸ்.பி., கட்சி யைச் சேர்ந்தவர்கள். பாரம் பரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 17 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் யு.எம்.எல்., 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

ஊழல் ஒழிப்பு, நல்லாட் சி, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி மற்றும் அரசியலில் மாற்றம் போன்ற கோரிக்கைகள் இந்த தேர்தலில் இளம் த லைமுறையினரால் முன் வைக்கப்பட்டன. அதையே தேர்தல் களத்தில் பிரதிபலித்த ஆர்.எஸ்.பி.,க்கு புதிய வாக்காளர்கள் இடையே அமோக ஆதரவு கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us