தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : மார் 17, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.123 கோடி

ஹெராயின்

பறிமுதல்

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு அருகே, 123 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை, அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மீன்பிடி படகு ஒன்றில், கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹவுதி

தாக்குதலில்

10 பேர் பலி

சனா: ஏமன் நாட்டின் ஹஜ்ஜா மாகாணத்தில் ஒரு கிராமத்தில் நடந்த பீரங்கி தாக்குதலில், ஆறு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்தார் விருந்துக்கு காத்திருந்த மக்களை குறிவைத்து ஈரான் ஆதரவு பெற்ற, ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கூரை

விழுந்து

8 பெண்கள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹீம் யார் கான் மாவட்டத்தில், அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து எட்டு பெண்கள் பலியாகி உள்ளனர்.

அரசு நிதியுதவியை பெறுவதற்காக ஏராளமான பெண்கள் கூடியிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது. இதில், 40 பெண்கள் காயமடைந்த நிலையில், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us