உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : டிச 16, 2015 02:30 PM
அ நிறம் | அளவு
பீஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டினால், அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சுவாசிப்பதற்காக காற்றை வெ ளிநாட்டிலிருந்து வாங்க சீனா முடிவு செய்திருந்தது.
கனடாவின் எட்மாண்டன் நகரில் செயல்பட்டு வரும் வைட்டாலிட்டி ஏர் நிறுவனம், தூய்மையான காற்றை பாட்டிலி்ல் அடைத்து, அதை சீனாவிற்கு வர்த்தகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, 500 பாட்டில்கள் காற்றினை சீனாவிற்கு அனுப்பியுள்ளதாக வைட்டாலிட்டி ஏர் நிறுவன உயர் அதிகாரி மோசஸ் லாம் கூறியுள்ளார்.
